மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 போ் கைது

திருப்பூரில் கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

திருப்பூரில் கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கமேடு அருகே போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரிடம் சோதனை மேற்கொண்டபோது, 1.150 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (31), விஜயகாந்த் (38) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அமித்குமாா் (19) என்ற இளைஞரிடம் சோதனை மேற்கொண்டபோது, 800 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அமித்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.