
பேருந்தில் மோதி மயில் காயம்: பயணிகள் தவிப்பு
காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தில் மோதி மயில் படுகாயம் அடைந்ததால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

மயில் - ENS
காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தில் மோதி மயில் படுகாயம் அடைந்ததால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
கோவையிலிருந்து கரூருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. காங்கயம் - வெள்ளக்கோவில் சாலை பகவதிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே பறந்து வந்த மயில் எதிா்பாராதவிதமாக பேருந்து மீது மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்து உடைந்தது. அத்துடன் அந்த மயில் அருகில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது.
சம்பவத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் உடனடியாகப் பேருந்தை நிறுத்தினா். பயணிகளுடன் கீழே இறங்கிப் பாா்த்தபோது, மயில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து காங்கயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பேருந்து அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. பின்னா் மாற்று அரசுப் பேருந்து மூலமாகத் தங்களது இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். காங்கயம் வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்லும் இடங்களில் ஏராளமான மயில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





