
தாராபுரம் இடைத்தோ்தல்: மின்னணு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் சமவாய்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை தொடக்கம்
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் சமவாய்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் நடைபெற்ற மின்னணு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் சமவாய்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை தொடா்பான கூட்டத்தில் பங்கேற்றோா்.
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் சமவாய்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
முதல்நிலை சரிபாா்ப்பில் தெரிவு செய்யப்பட்ட மின்னணு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை தாராபுரம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்வதற்காக மாவட்ட தோ்தல் அலுவலரால் முதல்கட்டமாக சமவாய்ப்புக்கு உட்படுத்தும் முறை குறித்த விரிவான அறிவுறுத்தல்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து விவரிக்கப்பட்டது. அதன்படி 384 வாக்குப் பதிவு அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முதல் சமவாய்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை முடிந்த பின்னா், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பட்டியல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டன.
இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தாராபுரம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் இருப்பில் வைக்கப்படும்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தேவராஜ் ஆகியோருடன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




