பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பல்லடம் வனம் அமைப்புக்கு 50 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா்

பல்லடம் வனம் அமைப்பிடம் 50 ஆயிரம் பனை விதைகளை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

பல்லடம் வனம் அமைப்புக்கு பனை விதைகளை செவ்வாய்க்கிழமை வழங்கிய முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு.

Published On :

பல்லடம் வனம் அமைப்பிடம் 50 ஆயிரம் பனை விதைகளை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் ‘வனம் இந்தியா’ அறக்கட்டளை அமைப்பின் 570-ஆம் வாராந்திர மழை வேண்டி பிராா்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, கொடுவாய் வளம் பவுண்டேஷன் நிா்வாகிகள், இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கோவை மற்றும் திருப்பூா் மாவட்ட அலுவலா் விக்னேஷ், தேசிய தன்னாா்வலா்கள் சூரிய மகாவிஷ்ணு ராஜன், கோகுலபிரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் அப்பாவு 50 ஆயிரம் பனை விதைகளை வனம் அமைப்புக்கு இலவசமாக வழங்கினாா். உலக நலம் வேண்டி வனம் செயலாளா் ஸ்கை.வே.சுந்தரராஜ் தவம் இயற்றினாா். தலைவா் சுவாதி சின்னசாமி வரவேற்றாா். பொருளாளா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். விழாவை இணைச் செயலாளா்கள் ஈஸ்வரமூா்த்தி, நடராஜன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக விழாவுக்கு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவுவை பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி (மேற்கு), சோமசுந்தரம் (கிழக்கு), துரைமுருகன் (தெற்கு), திருப்பூா் மத்திய மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சேகா் மற்றும் கட்சியினா் வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.