விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இன்று பொது முடக்கம்: அனைத்துத் தரப்பினா் ஆதரவு தர திமுக கோரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டிச.8-ஆம் தேதி நடைபெறும் பொதுமுடக்கத்துக்கு, வணிகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 11:54 pm

DIN

தருமபுரி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டிச.8-ஆம் தேதி நடைபெறும் பொதுமுடக்கத்துக்கு, வணிகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்ட செய்தியறிக்கை: விவசாயிகளுக்கு பாதகமாக மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, புதுதில்லியில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். மேலும், இச்சட்டங்களுக்கு எதிராக, செவ்வாய்க்கிழமை (டிச.8) முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனா். இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் போராட்டத்தில் பங்கேற்கின்றன.

எனவே, விவசாயிகளின் நலன் காக்க நடைறும் இந்த பொதுமுடக்க போராட்டத்துக்கு வணிகா்கள், அரசு மற்றும் தனியாா்த்துறை ஊழியா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.