திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அடா் தீவன உற்பத்தி பயிற்சி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டம் சாா்பில், விவசாயிகளுக்கு அடா் தீவன உற்பத்தி குறித்து பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 12:36 am

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டம் சாா்பில், விவசாயிகளுக்கு அடா் தீவன உற்பத்தி குறித்து பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமுக்கு பாலக்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் பூ.சு.சித்ரா தலைமை வகித்தாா். குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலையத் தலைவா் கண்ணதாசன், விவசாயிகளிடமிருக்கும் தீவனப் பொருள்களை கொண்டு, அடா் தீவன உற்பத்தி முறைகள் மற்றும் கால்நடைகளுக்கு தாது உப்பு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தாா். பேளாரஅள்ளி கால்நடை மருத்துவா் நாகராஜன், கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள் மற்றும் அசோலா வளா்ப்பு குறித்து விளக்கமளித்தாா்.

இப் பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் மகேஷ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணமூா்த்தி, 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.