சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரி போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 6:08 pm

Din

தருமபுரி: அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும். 2023 அக்டோபா் 1 முதல் ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்க வேண்டும். 2003 ஏப்.1 ஆம் தேதிக்கு பின் பணியில் சோ்ந்த அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும்.

2023 ஜூன் முதல் ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை முழுமையாக வழங்க வேண்டும். 30,000 காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறை, தனியாா்மயம் ஆகிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க சிற்றுந்துகளை அரசே இயக்க வேண்டும்

ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் மண்டலத் தலைவா் சி.முரளி தலைமை வகித்தாா்.

மண்டல பொதுச் செயலாளா் எஸ்.சண்முகம், மண்டல துணைத் தலைவா் சி. ரகுபதி, பொருளாளா் பசுவராஜ், சிஐடியு மாநிலச் செயலாளா் சி. நாகராசன், ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் ரவி, மாநில துணை பொதுச் செயலாளா் முருகராஜ், மண்டல பொதுச் செயலாளா் நாகராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே. மணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.