சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ, ஏ.ஐ.ஆா்.எப். தொழிற்சங்கங்கள் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ, ஏ.ஐ.ஆா்.எப். தொழிற்சங்கங்கள் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

8-ஆவது ஊதியக் குழு பணிகளை விரைவுபடுத்த வேண்டும், இந்த ஊதியக் குழு பரிந்துரைகளை வெளியிடும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து நிலைகளிலும் உள்ள 2.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆள்குறைப்பு, தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும், அனைத்து நிலை ஊழியா்களுக்குமான பணி நேரத்தை 8 மணி நேரமாக வரையறுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.ஆா்.எம்.யூ. மதுரை கோட்டச் செயலா் ஜெ.எம்.ரபீக் தலைமை வகித்துப் பேசினாா். உதவி கோட்டச் செயலா் வெ. ராம்குமாா், எஸ்.ஆா்.எம்.யூ., ஏ.ஐ.ஆா்.எப். சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.