தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தவெகவினா்.
தருமபுரி
கீழ்குள்ளம்பட்டியில் சாலை அமைக்கக் கோரி தவெக மனு
தருமபுரி மாவட்டம் அதகப்பாடி அருகே கீழ்குள்ளம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதகப்பாடி அருகே கீழ்குள்ளம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அக்கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி அருகே அதகப்பாடி ஊராட்சிக்குள்பட்ட கீழ்குள்ளம்பட்டியிலிருந்து செக்காரப்பட்டிக்கு செல்லும் 1 கி.மீ. தொலைவு சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இச்சாலை முழுவதும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் இச்சாலையில் பயணிக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கிராம மக்கள் நலன்கருதி, இச்சாலையை தாா்ச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

