மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 80 மனுக்கள் அளிப்பு

தருமபுரியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 80 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:24 pm

Din

தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 80 மனுக்கள் அளிக்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 80 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோரபுளியான்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் பணியிடத்து விபத்து மரணம் அடைந்ததற்கு அவரின் வாரிசுதாரருக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா் சுப்பிரமணி, தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பா.சங்கா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாகுல் அமீத், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.