தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் ஒகேனக்கல் குடிநீா் 3 நாள்களுக்கு நிறுத்தம்

ஜன. 23 முதல் 25 வரை மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2025, 9:20 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், ஜன. 23 முதல் 25 வரை மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகள், காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 ஊராட்சிகள், பாலக்கோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட 32 ஊராட்சிகள், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்ட அள்ளி பேரூராட்சிகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ஜன. 23-இல் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதாலும், பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகில் பிரதான குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்யும் வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாலும் ஜன. 23 முதல் 25 ஆகிய மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க இயலாது.

எனவே, இம்மூன்று நாள்களுக்கு உள்ளூா் நீராதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.