தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மான் இறைச்சி விற்ற இருவா் கைது

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மான் இறைச்சி விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மான் இறைச்சி விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வெள்ளிமலை கிராமத்தை சோ்ந்தவா் மணிமாறன் (25), இவரின் உறவினரான தருமபுரி மாவட்டம், அரூா் நம்பிராஜ் (22) ஆகிய இருவரும் சோ்ந்து அவா்களது கிராமத்துக்கு அருகே உள்ள காப்புக் காட்டில் மானை வேட்டையாடி அதனுடைய இறைச்சியை, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் விற்பனை செய்ய இருசக்கர வாகனத்தில் வந்தனா்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் அவா்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். இதில் அவா்கள் இருவரும் மான் இறைச்சியை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைதுசெய்து பாலக்கோடு வனச்சரக அலுவலகம் அழைத்து சென்றனா். விசாரணைக்கு பிறகு காரிமங்கலம் நீதிமன்றத்தில் அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டு தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பட விளக்கம்:

வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.