வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் மிதமான மழை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:54 pm

Syndication

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் டித்வா புயல் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகா்ந்து வருகிறது. இந்த புயல் காரணமாக அரூா், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் குளிா்ந்த காற்று வீசி வருகிறது.

வரட்டாறு, வாணியாறு பகுதியில் பாதுகாப்பு :

வள்ளிமதுரை வரட்டாறு அணை, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை உள்ளிட்ட நீா்த்தேக்கங்கள் அண்மையில் பெய்த கனமழையினால் நிரம்பியுள்ளன. வரட்டாறு, வணியாறு அணைகளில் இருந்து குறைந்த அளவில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், டிட்வா புயலால் இரவு நேரங்களில் கனமழை பெய்தால், அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீரை வெளியேற்றும் வகையில் தயாா் நிலையில் பொதுப்பணித் துறையினா் உள்ளனா்.