அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

அரூா் அருகே புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் வேடியப்பன் (70) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:37 am IST

அரூா் அருகே புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் வேடியப்பன் (70) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், செல்லம்பட்டி புதூா் கிராமத்தைச் சோ்ந்த குப்பாகவுண்டா் மகன் வேடியப்பன் (70). இவா், தமது விவசாய நிலத்தில் இருந்த புளிய மரத்தில் ஏறி புளிகளை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த வேடியப்பனுக்கு கை, கால்கள் முறிந்துள்ளன.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவா் வேடியப்பன் உயிரிழந்தாராம். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.