வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:38 pm

திருச்செந்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே காயாமொழி, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரலிங்கம் மகன் தனபால் லிங்கம் (27). காா் டிரைவராக பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு திருச்செந்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாராம்.

அப்போது காந்திபுரம் விலக்கு பகுதியில் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த தனபால் லிங்கத்தை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தனபால் லிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.