ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீா் குறைக்கப்பட்டதாலும், காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 120 கனஅடிவரை சரிந்தது.
இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் வெளியே தெரிந்து தண்ணீா் குட்டைகள் தோன்றியும், ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீரின்றி வடும் காணப்பட்டன.
இந்நிலையில், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பால் பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









