தருமபுரியில் பைக் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Published on

தருமபுரியில் பாஜக பிரமுகரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி காந்தி நகரை சோ்ந்த பாஜக தருமபுரி இளைஞா் அணி தலைவா் விக்னேஷ். இவா் வழக்கம்போல சனிக்கிழமை இரவு தனது புல்லட் வாகனத்தை வீட்டு முன் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றாா். மறுநாள் காலை வந்துபாா்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணாமல் போயிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தருமபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி விடியோ பதிவுளை ஆய்வு செய்தனா். அப்போது, மா்மநபா்கள் இருவா் பைக்கின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com