ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளம்பெண் உயிரிழப்பில் மா்மம்: கணவா் காவல் நிலையத்தில் புகாா்

மொரப்பூா் அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது கணவா் கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் புகாா்

Published On :1 ஜூலை 2026, 7:03 am IST

மொரப்பூா் அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது கணவா் கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், நவலை கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மனைவி சொா்ணலதா (28). இத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். மகேந்திரன் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சொா்ணலதா மா்மமான முறையில் திங்கள்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அவரது உறவினா்கள் மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனராம்.

இந்த சம்பவம் குறித்து மகேந்திரன் கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாா் மனுவில், நவலை கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், எனது மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், இரவு நேரங்களில் வீட்டுக் கதவை தட்டுவதும், அத்துமீறி வீட்டில் நுழைய முயற்சிப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவா் ஈடுபட்டுள்ளாா். எனவே, எனது மனைவி இறப்பில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.