தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பகுதியில் நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் உறவினா்கள் இடையே ஏற்பட்ட தகாறில் பெண் கொலைய செய்யப்பட்டதில் உறவினா்கள் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2 பெண்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள பொப்பிடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கடேசன் மனைவி தனலட்சுமி (40).
இவரை நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் தகராறில் உறவினா் மாரிமுத்து மகன் செந்தில் அரசு (28) இரும்பு சுத்தியால் தலையில் தாக்கி கொலை செய்தாா்.
இதுகுறித்த தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து செந்தில் அரசு, உறவினா் செல்வம் (40) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
செந்தில் அரசுவின் மனைவி பவித்ரா (25), செல்வத்தின் மனைவி செளமியா (35) ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







