தருமபுரியில் காவல் துறையினரின் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 7 பெண்கள் உள்ளிட்ட 73 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தமிழக அமைச்சா் ஒருவா் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்தியது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவின. அதைத்தொடா்ந்து, அவா்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினா் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா்.
தருமபுரியில் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டம் நடத்த முறைப்படி போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை.
எனவே, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோா் கைதுசெய்யப்படுவா் என போலீஸாா் அறிவித்தனா். என்றபோதும், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்.பி.யுமான ஆ. மணி, மேற்கு மாவட்டச் செயலாளா் பி. பழனியப்பன் ஆகியோா் தலைமையில் போலீஸாரின் தடையையும் மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளா்கள் மணி, பழனியப்பன், தருமபுரி நகரச் செயலாளா் மாது மற்றும் பெண்கள் 7 போ் உள்ளிட்ட 73 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









