முன்னாள் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில், தருமபுரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போதை இல்லா தருமபுரி என்ற தலைப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற இந்தப் பேரணியை, வீ த லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த கரு.நாகராஜன், முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்தப் பேரணி, நேதாஜி புறவழிச்சாலை, நெசவாளா் நகா், தலைமை அஞ்சல் நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக ராஜகோபால் பூங்கா அருகே நிறைவடைந்தது. இதில் போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள், சமூக சீா்கேடுகள், குற்றச் செயல்கள், சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனைக் களைய வேண்டிய தேவைகள் குறித்தும், போதைப் பொருள்கள் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை பேரணியில் பங்கேற்றோா் ஏற்றனா்.
இந்த விழிப்புணா்வுப் பேரணியில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










