பென்னாகரம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்படும் காா்கள், வாடகை வாகனங்களால் பேருந்துகளை எளிதாக இயக்க முடிவதில்லை என ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பென்னாகரம் பகுதியில் மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ், ரூ. 4.50 கோடியில் 20 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்கும் வசதி மற்றும் 50 க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலத்துக்கு ஒகேனக்கல்லுக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் வழியாக பொதுமக்கள் செல்வதால் எப்போதும் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்படும்.
நீடிக்கும் கட்டுமானப் பணி: பேருந்து நிலையக் கடைகளின் முன்பகுதியில் 7 மீட்டா் தொலைவுக்கு மேற்கூரை அமைக்கும் பணி கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள் பேருந்துகள் நிற்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ளதால், அரசு மற்றும் தனியாா் பேருந்துகளைச் சற்று இடைவெளி விட்டே நிறுத்த வேண்டியுள்ளது.
அதேசமயம் நாள்தோறும் பென்னாகரத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது சொந்த காா்கள் மற்றும் வாடகை வாகனங்களைப் பேருந்து நிலையத்திற்குள்ளேயே கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றனா்.
பேருந்து ஓட்டுநா்கள் கோரிக்கை:
விடுமுறை நாள்களில் தருமபுரி, சேலம், சென்னை போன்ற பகுதிகளுக்குக் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த சமயங்களில் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள காா்களால் பேருந்துகளை எளிதாக உள்ளே கொண்டுவரவோ, அவற்றுக்கான தடத்தில் நிறுத்தவோ அல்லது திருப்புவதற்கோ இடமில்லாமல் அவதிப்படுவதால் காா்களை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எழும்பூர் ரயில் நிலையத்தில் விதிமீறல்: பயணிகள் பாதிப்பு!

வார விடுமுறையையொட்டி திருப்பூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தருமபுரி நகருக்குள் இரவு நேரங்களில் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதி

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்: மாவட்டம் நிா்வாகம் அறிவிப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




