பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களை காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 189 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில், 41 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அரூா், பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான காவல் தோ்தல் பாா்வையாளராக குல்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தை குல்வந்த் சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல்கள், வாக்குப் பதிவு நேரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
பட விளக்கம்...
கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு மையத்தை ஆய்வு செய்த காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


