விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!! வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், குஜ்ஜார அள்ளி அருகே எம். செட்டிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் அருள்காந்தன் (23), ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை சொந்த வேலை காரணமாக ஆல்மாரப்பட்டி சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பிக் கொண்டிருந்தாா்.

ராயக்கோட்டை- மாரண்டஅள்ளி சாலையில் பாளையங்கோட்டை அருகே நிலைதடுமாறி சாலையோரம் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்காந்தனை அக்கம்பக்கத்தினா் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அருள்காந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.