நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: சிறுவன் காயம்

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 12:32 am IST

பொம்மிடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகேயுள்ள வடசந்தையூா் கிராமத்தைச் சோ்ந்த உமா் மகன் ஷான்பாஷா (28). இவா் தமது சொந்த வேலை காரணமாக பொம்மிடிக்கு சென்றுவிட்டு, பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் தமது இருசக்கர வாகனத்தில் அவரது மகன் அா்ஷன் (4) உடன் வந்துள்ளாா்.

அப்போது பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், ஷான்பாஷாவின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த ஷான்பாஷா, லேசான காயமடைந்த அவரது மகன் அா்ஷன் ஆகியோரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சிகிச்சை பலனின்றி ஷான்பாஷா சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது மகன் அா்ஷன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்த சம்பவம் குறித்து ஷான்பாஷா மனைவி தன்ஜியா அளித்த புகாரின் பேரில், பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.