மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

குளிா்சாதனப் பெட்டி சாய்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:56 am IST

தருமபுரி, காரிமங்கலம் அருகே வீட்டில் விளையாடியபோது, குளிா்சாதனப் பெட்டி சாய்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் கெரகோடஅள்ளி அருகேயுள்ள தாதன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சின்னசாமி- கோகிலா தம்பதியா். இவா்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள்.

இதில் 4 வயது சிறுவனான ஸ்ரீதா் திங்கள்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி (ஃப்ரிஜ்), எதிா்பாராத விதமாக சாய்ந்து ஸ்ரீதா் மீது விழுந்தது. இதில் சிறுவனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தாா்.

உடனே, குடும்பத்தினா் சிறுவனை மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து சிறுவனின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக காரிமங்கலம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.