கட்டப் பஞ்சாயத்தில் அபராதம்: செலுத்த முடியாத விவசாயி தற்கொலை

ஒசூர், ஜன.8: ராயக்கோட்டை அருகே, கட்டப்பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 3 பேர் சனிக்கிழமை கைது
Updated on
1 min read

ஒசூர், ஜன.8: ராயக்கோட்டை அருகே, கட்டப்பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ராயக்கோட்டை அருகேயுள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா (33). இவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்களாம்.

இத் தொகையை செலுத்த முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), கிருஷ்ணப்பா (40), ஸ்ரீனிவாசஸ் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

பொங்கலுக்குப் பின் கூட்டணி முடிவு

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பொங்கலுக்குப் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து அறிவிப்பார். ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி தொடக்கத்திலோ பாமக இடம் பெறும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com