சாலை விபத்துகளால் 2 நிமிஷங்களுக்கு ஒருவர் உயிரிழக்கிறார்

சேலம், ஜன. 8: இந்தியாவில் சாலை விபத்துகளால் 2 நிமிஷங்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கலை அரசி தெரிவித்தார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக கழக சேலம் கோட்டத்தின் சார்பில் 22-வது சாலைப
Updated on
1 min read

சேலம், ஜன. 8: இந்தியாவில் சாலை விபத்துகளால் 2 நிமிஷங்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கலை அரசி தெரிவித்தார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக கழக சேலம் கோட்டத்தின் சார்பில் 22-வது சாலைப் பாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது.

 போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சிறந்த ஓட்டுநர்களுக்குப் பரிசுகள் வழங்கி கலைஅரசி பேசியது:

 ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது தொலைத் தொடர்பு. அதுபோல் சாலைப் போக்குவரத்தின் வளர்ச்சியும் முக்கியமான ஒன்றாகும்.

 சாலை விதிகளை சாலையில் பயணிக்கும் அனைவரும் பின்பற்றினால்தான் விபத்துகளைத் தடுக்க முடியும். உலகம் முழுவதும் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12 லட்சம் பேர் இறக்கின்றனர். சுமார் 5 கோடி பேர் படுகாயமடைகின்றனர்.

 இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 2 நிமிஷங்களுக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது. 11 நிமிஷங்களுக்கு ஒரு பெரிய விபத்து ஏற்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.55,000 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

 சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள் அதை மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும். தனி மனிதர்கள் அனைவரும் சாலை விதிகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

 குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரும், ஆசிரியர்களும் சாலை விதிகளை சொல்லிக் கொடுப்பதால் கட்டுப்பாடான குழந்தைகளை உருவாக்க முடியும்.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் காரணமாக விபத்துகள் பெருமளவு குறையும். எனவே, நாம் ஒவ்வொருவரும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதுடன் மற்றவர்களுக்கும் இதன் அவசியத்தை உணர்த்த வேண்டும் என்றார் அவர்.

 சேலம் அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் தே.ஆல்பிரட் தினகரன், போக்குவரத்துத் துணை ஆணையர் து.சுகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.உமாசக்தி, சி.லட்சுமணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com