பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுபான்மையினர் கடனுக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

தருமபுரி, ஜன. 8: தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு நடப்பாண்டு கடன் வழங்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சிறுபான்மையின நல அலுவலர் த.சுந்தரேசன் தெரிவித்தார்.  மாவட்ட சிற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தருமபுரி, ஜன. 8: தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு நடப்பாண்டு கடன் வழங்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சிறுபான்மையின நல அலுவலர் த.சுந்தரேசன் தெரிவித்தார்.

 மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் மகளிர் உதவிச் சங்க அறிமுக விழா தருமபுரியில் சனிக்கிழமை நடந்தது. இதில் மாவட்ட சிறுபான்மையின நல அலுவலர் த.சுந்தரேசன் பேசியது:

 சிறுபான்மையினர் நலனுக்காக தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றைத் தகுதியான பயனாளிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஆதரவற்றோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, நலவாரிய உறுப்பினர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை உதவி என பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் உள்ளன. மகளிர் குழுக்கள் ஏற்படுத்தினால் சுழல்நிதி, தனிநபர் கடன், தொழில் கடன் வழங்கப்படுகிறது.

 மேலும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கடனுதவி வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், ரூ.50 லட்சம் சிறுதொழில் தொடங்கவும், ரூ.5 லட்சம் கல்விக் கடன், ரூ.25 லட்சம் தனிநபர் கடனும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

 மகளிர் திட்ட அலுவலர் எஸ்.ஜனகவல்லி, சங்க மாவட்ட செயலர் ஏ.இலியாஸ், மாவட்ட அரசு காஜி பசலேகரீம், கௌரவ இணைச் செயலர் சையத் அன்வர் பாஷா, சங்க உறுப்பினர்கள் அசீனாபேகம், ஷம்ஷாத் பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.