கம்பைநல்லூர் அருகே இளம்பெண்ணை இழிவாக பேசியதாக மூவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி மகேஸ்வரி (22). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேஸ்வரியை கார்த்திகேயன் குடும்பத்தினர் ஜாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன்கள் கார்த்திகேயன் (60), தமிழ்ச்செல்வன் (50), தமிழ்ச்செல்வன் மனைவி அனுசுபா (45) ஆகிய மூவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

