பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மாநிலம் முழுவதும் 42 அரசுக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களை மட்டுமே மாணவர்கள் அணுக வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவுரை வழங்கியுள்ளார்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கல்லூரிகளுக்கான இணையதளம் மூலமான கலந்தாய்வு வரும் ஜூலை 25ஆம் தேதி தொடங்கி, ஆக. 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5 கட்டங்களாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், ஒவ்வொரு கட்டத்திலும் முதல் 5 நாட்கள் மாணவர்கள் கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்யலாம்.
190 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதல் கட்டத்திலும், 175 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், 150 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு மூன்றாம் கட்டத்திலும், 125 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு 4ஆம் கட்டத்திலும், 125 கட்ஆப் மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்களுக்கு 5ம் கட்டத்திலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வுக்காக மாநிலம் முழுவதும் உள்ள 42 அரசுக் கல்லூரிகளில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இவற்றில் இருப்பர். மாணவர்கள் தேவையான அத்தனை உதவிகளும் இச் சேவை மையங்களில் வழங்கப்படும். ஆலோசனைகளும் வழங்கப்படும்.
எனவே, மாணவர்கள் இச் சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மையங்களுக்குச் சென்று குழம்பிக் கொள்ள வேண்டாம். பதிவு செய்த பிறகு, வீட்டிலிருந்தபடியே தங்களுக்கான ஒதுக்கீட்டைத் தெரிந்து கொண்டு, வீட்டிலுள்ளவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
கலந்தாய்வுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 1000 கட்டணமாகவும், மற்ற பிரிவினருக்கு ரூ. 5000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய அரசுப் பொறியியல் கல்லூரிகளில் தலா 240 புதிய இடங்கள் வீதம் 720 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்லூரிக் கட்டணங்களைப் பொருத்தவரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால், தயங்காமல் நடவடிக்கை எடுப்போம் என்றார் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெத்தாம்பாளையம் அருகே பெண் சடலம் மீட்பு

பெண் தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டி விழிப்புணா்வு
தனியாா் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


