தருமபுரி மாவட்டத்தில் சோலார் மின் மோட்டார் அமைக்க 82 விவசாயிகளுக்கு ரூ.2.82 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
சோகத்தூர் ஊராட்சி ஆட்டுக்காரன்பட்டியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் இந்த வகை பம்ப் அமைத்து விவசாயம் செய்து வரும் விவசாயி ஜி.சிவசாமியின் சோலார் அமைப்பினை வேளாண் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர் பி.பத்மாவதி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
ரூ.5.41 லட்சத்தில் இவர் அமைத்துள்ள சோலார் அமைப்புக்கு, அரசு மானியமாக ரூ.3.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த சோலார் அமைப்பு தற்போது வரை நல்ல முறையில் இயங்கி வருகிறது.
அதேபோல, வி.நாராயணமூர்த்தி என்பவரும் ரூ.3.78 லட்சத்தில் சோலார் மோட்டார் அமைத்து பாசனம் செய்து வருகிறார். இவருக்கான அரசு மானியம் ரூ.2.84 லட்சம்.
இது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது. கிணற்றில் சுமார் 60 அடி ஆழத்தில் 5 குதிரைத் திறனுள்ள மோட்டார், சுமார் 40 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் இறைக்கும் திறன் கொண்டது. தருமபுரி மாவட்டத்தில் 82 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோலார் அமைப்புகளின் செயல்பாட்டை வேளாண்மை பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர் பி.பத்மாவதி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

