பட்டா வழங்கக் கோரி தர்னா
பட்டா வழங்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அருந்ததியினர் இன மக்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.


பட்டா வழங்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அருந்ததியினர் இன மக்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நெருப்பூர் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியினர் இன மக்கள் 120 குடும்பத்தினர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், ஏற்கெனவே பல ஆண்டுகளா மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி, ஆதித் தமிழர் பேரவை சார்பில், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இது குறித்து, தகவல் அறிந்த, தருமபுரி கோட்டாட்சியர் க.ராமமூர்த்தி மற்றும் வருவாய்த் துறையினர், தர்னா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பட்டா வழங்குவதற்கான நடைமுறைப் பணிகளை வருவாய்த் துறையினர் உடனே தொடங்கிவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...