மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மான் வேட்டை : இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

அரூர் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.

Updated On :14 மே 2018, 9:16 pm

அரூர் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் காப்புக்காடு வெள்ளைக்குட்டை பகுதியில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் சுற்றித் திரிவது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், வழியங்காடு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் லட்சுமணன் (37), அய்யம்பெருமாம்பட்டியைச் சேர்ந்த குள்ளப்பன் மகன் சிவசாமி (29) என்பதும், இவர்கள் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியால் ஒரு பெண் புள்ளி மானை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிப்பட்ட இருவரையும் வனத் துறையினர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக லட்சுமணன், சிவசாமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.