இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கேபிள் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :14 மே 2018, 9:17 pm

தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தருமபுரி மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் ஏ.பாண்டி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முனுசாமி, அருளரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கேபிள் டிவி மாவட்ட மையத்திலிருந்து, மாவட்டம் மற்றும் வட்டார கேபிள் டிவி ஆபரேட்டர்களின் இடையூறுறின்றி, நீதிமன்ற உத்தவுப்படி, நேரடியாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி, புதிய உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களை நியமிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.