திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பென்னாகரத்தில் விவசாயிகள்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 6:09 pm

DIN

பென்னாகரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் கே. அன்பு தலைமை வகித்தாா். கரோனா தொற்று கால நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்களாக மாற்றியமைக்க வேண்டும். கூலியை நாளொன்றுக்கு ரூ.600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி. ராஜு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பி.எம். முருகேசன், குமாா், சிவா, பென்னாகரம் பகுதி குழு உறுப்பினா் ஜீவானந்தம், சின்னம்பள்ளி பகுதி குழு உறுப்பினா் சக்திவேல், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் கே.ஜி. கருவூரான் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.