47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொப்பூா் கணவாய் சாலையில் அமைச்சா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் சென்ற லாரி முன்னால் சென்ற காா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைத்தாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில உயா் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் நேரில் பாா்வையிட்டு விபத்துக்குள்ளான வாகனங்கள் மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.