தருமபுரி: சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 3,560 பெண்கள் உள்பட மொத்தம் 22,152 பேர் எழுதினர்.
தமிழக காவல் துறையில் மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் காலியாக இருக்கும் 3,784 பணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காலியாக இருக்கும் 6,545 பணியிடங்கள், சிறைத்துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலைக் காவலர் 119 பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் இருக்கும் 458 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 10,906 பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்த எழுத்து தேர்வான தருமபுரி மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெற்றது. இதில் 18,592 ஆண்கள், 3,560 பெண்கள் பங்கேற்று எழுத்து தேர்வுகளை எழுதினர். இந்த காவலர் எழுத்து தேர்வுக்கு 3,261 ஆண்களும், 450 பெண்களும் பங்கேற்கவில்லை என தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.