47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தருமபுரி மாவட்டத்தில் காவலா் தோ்வு

தருமபுரி மாவட்டத்தில் காவலா் தோ்வை 3,560 பெண்கள் உள்பட மொத்தம் 22,152 போ் எழுதினா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:50 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் காவலா் தோ்வை 3,560 பெண்கள் உள்பட மொத்தம் 22,152 போ் எழுதினா்.

28 மையங்களில் நடைபெற்ற தோ்வை 18,592 ஆண்களும், 3,560 பெண்களும் பங்கேற்று எழுதினா். தோ்வில் ஆண்கள் 3,261 பேரும், பெண்கள் 450 பேரும் பங்கேற்கவில்லை என தருமபுரி மாவட்டக் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்வு எழுத 9,588 ஆண்களும், 1,435 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 11,025 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 8,798 ஆண்கள், 1,238 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 10,038 போ் தோ்வெழுதினா். 790 ஆண்கள், 197 பெண்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கந்திகுப்பம் பி.எஸ்.வி. பொறியியல் கல்லூரி, போலுப்பள்ளி அறிஞா் அண்ணா கலை- அறிவியல் கல்லூரி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஒசூா் செயின்ட் ஜோசப் பள்ளி என 6 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கரோனா தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.