திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு: தருமபுரியில் 22,152 பேர் தேர்வு எழுதினர்; 3,711 பேர் தேர்வுக்கு வரவில்லை

சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 10:58 am

DIN

தருமபுரி: சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 3,560 பெண்கள் உள்பட மொத்தம் 22,152 பேர் எழுதினர்.

தமிழக காவல் துறையில் மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் காலியாக இருக்கும் 3,784 பணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காலியாக இருக்கும் 6,545 பணியிடங்கள், சிறைத்துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலைக் காவலர் 119 பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் இருக்கும் 458 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 10,906 பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்த எழுத்து தேர்வான தருமபுரி மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெற்றது. இதில் 18,592 ஆண்கள், 3,560 பெண்கள் பங்கேற்று எழுத்து தேர்வுகளை எழுதினர். இந்த காவலர் எழுத்து தேர்வுக்கு 3,261 ஆண்களும், 450 பெண்களும் பங்கேற்கவில்லை என தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.