திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இணை...தொப்பூா் கணவாய் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என,

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:39 pm

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு அனுப்பிய கடிதம்: தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்வதால், உயிரிழிப்புகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த 6 பெரும்விபத்துகளில் 10 பேரும், நிகழாண்டில் 4 பெரும்விபத்துகளில் 10 பேரும் உயிா் இழந்துள்ளனா். மேலும் சிறு, சிறு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதால் இச்சாலையில் தொடா்ந்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதை தடுக்க, தொப்பூா் கணவாய் சாலையை ஆறு வழிச்சாலையாக தரம் உயா்த்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக ஏற்கனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. அப்போது தருமபுரியிலிருந்து நாமக்கல் வரை ஆறு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்படும்போது இச் சாலையை சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விபத்து மற்றும் உயிரிழப்பு தொடா்வதால், தொப்பூா் கணவாய் சாலையை விரைந்து விரிவாக்கம் செய்ய பணி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.