இதையடுத்து ஏற்பட்ட தகராறில் அதிமுக கிளைச் செயலர் ஆறுமுகம் மீது, அமமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அமமுக கழக அமைப்பு செயலர் முருகன், கட்சி நிர்வாகிகள் கனகராஜ், நரசிம்மன், சிற்றரசு, தீப்பொறி செல்வம், கமல், ஏகநாதன், தென்னரசு மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் மீது 147, 148, 323, 294 (பி), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமமுக நிர்வாகிகள் நரசிம்மன், கே.குமார், தீப்பொறி செல்வம் ஆகியோரை ஏற்கனவே மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அமமுக நிர்வாகிகள் தலைமறைவாக இருந்தனர்.