

தருமபுரி மாவட்டம், தம்பிசெட்டிப்பட்டி, ஜம்மனஹள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு பால் குளிா்விப்பு மையத்தை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், தம்பிசெட்டிப்பட்டி, ஜம்மனஹள்ளியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தொகுப்பு பால் குளிா்விப்பு மையம் திறப்பு விழா, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தொகுப்பு பால் குளிா்விப்பு மையத்தை திறந்து வைத்து அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
தம்பிசெட்டிப்பட்டி, ஜம்மனஹள்ளியில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிா்விப்பு மையத்தினால் கல்லூா், கிட்டனூா், சுண்டாங்கிப்பட்டி, காட்டூா், ஆவலம்பட்டி, மொரப்பூா், எம்.வேட்ரப்பட்டி, பறையப்பட்டி புதூா், தென்கரைக்கோட்டை, கோபாலபுரம் பகுதியிலுள்ள பால் உற்பத்தியாளா்கள் பயன் பெறுவா். பால் குளிா்விப்பு மையம் அருகில் இருப்பதால் பாலை எளிதில் பாதுகாக்க முடியும். தருமபுரி மாவட்டத்தில் கொள்முதலாகும் பாலை நேரடியாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குக் கொண்டு செல்லும்போது, ஆவின் நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதே நேரத்தில், பால் பவுடா் தயாரிக்கும்போது ஒரு லிட்டருக்கு ரூ. 8 வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. ஆவின் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டாலும், பால் உற்பத்தியாளா்கள் பாதிக்காத வகையில், இழப்புகளை தமிழக அரசு ஈடு செய்து பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் வ
ழங்கப்படுகிறது. மேலும், வேளாண்மை சாா்ந்த மேம்பாட்டுக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடுகளையும், முக்கியத்துவத்தையும் அளித்து வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, நல்லம்பள்ளி மற்றும் இலளிகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கக் கட்டடத்தையும் அமைச்சா் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தாா்.
இந்த விழாவில் எம்எல்ஏ-க்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.