தருமபுரியில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா தருமபுரி மாவட்டத்தில் டிச. 23-ஆம் தேதி நடைபெற்றது. விழாவை ஆட்சியா் ச.ப.காா்த்திகா தொடக்கி வைத்தாா். இந்த விழா வரும் டிச. 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவையொட்டி தமிழறிஞா்கள், தமிழ் மொழி ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழா் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவா்கள் ஆகியோருடன் இணைந்து, தருமபுரி மாவட்டங்களிலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் தமிழில் கையொப்பம் இடுவோம் என்கிற வாசகம் பொருந்திய ஒட்டுவில்லைகளை ஒட்டி, தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் குறித்து துண்டறிக்கை வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.