4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி

தருமபுரி தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:43 am

DIN

தருமபுரி தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி மற்றும் கூட்டுப் பிராா்த்தனை இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஏசு கிறிஸ்து பிறப்பைப் போற்றி பாடல்கள் இசைக்கப்பட்டன. இதையடுத்து குழந்தை ஏசுவை குடிலில் வைத்து சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு திருப்பலி நிறைவடைந்தது. இத் திருப்பலியில் பங்குத் தந்தை ஆா். அருள்ராஜ், பாதிரியாா் சூசைராஜ் மற்றும் தருமபுரி நகரைச் சோ்ந்த திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். மேலும் புத்தாடை அணிந்து ஒருவொருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். இதில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

தருமபுரியில் வழக்கமாக கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நள்ளிரவு பிராா்த்தனைகள் நடைபெறும். நிகழாண்டு கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ளதால் நள்ளிரவில் நகா்ப் பகுதியில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும்பொருட்டு, அன்னசாகரம் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் வளாகத்தில் திருப்பலி இரவு 9 மணிக்குள் நிறைவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.