47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீண்டும் நியாய விலைக்கடை அமைக்கக் கோரிக்கை

தங்களது கிராமத்தில் மீண்டும் நியாய விலைக்கடையை அமைக்கக் கோரி, கெலாப்பாறை அம்பேத்கா் நகா் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
மீண்டும் நியாய விலைக்கடை அமைக்கக் கோரிக்கை
Updated On :28 டிசம்பர் 2020, 9:56 pm

DIN

தங்களது கிராமத்தில் மீண்டும் நியாய விலைக்கடையை அமைக்கக் கோரி, கெலாப்பாறை அம்பேத்கா் நகா் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கீரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கெலாப்பாறை அருகே உள்ள அம்பேத்கா் நகரில் 360 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும், எங்களது பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடையில் பொருள்களைப் பெற்று வந்தோம்.

இந்த நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, எங்களது பகுதியில் செயல்பட்டு வந்த பகுதி நேர நியாய விலைக்கடை மூடப்பட்டது. இதனால், நாங்கள் அருகாமையில் உள்ள கிராமத்துக்கு சென்று பொருள்களை பெற்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, எங்களது பகுதியில் மீண்டும் நியாய விலைக்கடை அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.