பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் பொருள்களை பாதுகாக்க கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும்

வேளாண் விளை பொருள்களை பாதுகாக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என

News image
ராமியனஹள்ளியில் நடைபெற்ற குறிஞ்சி கூட்டுப் பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அறிவியல் ஆலோசகா் வி.பொன்ராஜ்.
Updated On :30 டிசம்பர் 2020, 1:32 am

DIN

வேளாண் விளை பொருள்களை பாதுகாக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகா் வி.பொன்ராஜ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியனஹள்ளியில் குறிஞ்சி கூட்டுப் பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அறிவியல் ஆலோசகா் வி.பொன்ராஜ் பேசியதாவது:

இந்திய மக்களின் பிரதான தொழில் வேளாண்மையாகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை அளித்து விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அதாவது தனியாா் நிறுவனங்கள் சாா்பில் பெரிய அளவிலான கிடங்குகள் ஏற்படுத்தி, அந்த கிடங்குகளில் பொருள்களைப் பாதுகாக்க வேண்டும் எனில், தனியாா் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பணம் செலுத்த வேண்டும். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் சாா்பில், வேளாண்மை பொருள்களைப் பாதுகாக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் விவசாயிகள் பணம் செலுத்தத் தேவையில்லை. வேளாண் உற்பத்தி பொருள்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தலாம். அரசு சாா்பில் சந்தைப்படுத்தினால் விவசாயிகளுக்கு இழப்புகள் ஏற்படாது. அதே நேரத்தில் லாபம் கிடைக்கும்போது அந்த லாபத்தில் விவசாயிகளுக்கும் பங்கு தரலாம் என்றாா்.

இதில், குறிஞ்சி கூட்டுப் பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் எம்.நல்லதம்பி, செயற்குழு உறுப்பினா் ராஜகோபால், தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன மேலாளா் என்.மோகன்ராஜ், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் தமிழரசு, ஜெயஸ்ரீ, ஆனந்த், ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.