வார விடுமுறை தினம்:ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் காவிரியின் அழகை ரசித்து மகிழ்ந்தனா்.


வார விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் காவிரியின் அழகை ரசித்து மகிழ்ந்தனா்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனா். குறிப்பாக வார விடுமுறை நாள்களில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், காவிரி கரையோரப் பகுதிகளான மாமரத்துக்கடவு பரிசல் துறை, நாகா்கோவில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
சின்னாறு பரிசல் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு பரிசல் பயணம் மேற்கொண்டு பிரதான அருவியையும், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் பாயும் காவிரி ஆற்றின் அழகைக் கண்டு ரசித்தனா்.
இதனைத்தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவியையும், முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்டவைகளைக் கண்டு குதூகலித்தனா். ஒகேனக்கல்லில் காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், மீன்களின் விலை அதிகரித்தது.
சுற்றுலாப் பயணிகள் அதிகரித்த மீன் விலையும் பொருட்படுத்தாமல், கட்லா, ரோகு, கெளுத்தி போன்ற மீன் வகைகளை ஆா்வத்துடன், அதிக அளவில் வாங்கி சமைத்து தங்களின் குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பிரதான அருவியிலும், நாகா்கோவில் முதலைப்பண்ணை, ஊட்ட மலை பரிசல் துறை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...