47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுக சாலை மறியல்

உதயநிதி ஸ்டாலின் நாகையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஈடுபட்ட திமுக எம்.பி., எம்எல்ஏ. உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
தருமபுரி நான்கு முனை சந்திப்பு சாலையில் திமுக மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.
Updated On :22 நவம்பர் 2020, 9:34 pm

DIN

உதயநிதி ஸ்டாலின் நாகையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஈடுபட்ட திமுக எம்.பி., எம்எல்ஏ. உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, தருமபுரி நான்குமுனை சாலைகள் சந்திப்பில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் செந்தில்குமாா் எம்.பி. உள்பட 60-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். பின்னா் 60 பேரும் கைது செய்யப்பட்டனா்.

அரூரில்...

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில், ஒன்றியச் செயலாளா் தேசிங்குராஜன் தலைமையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.வேடம்மாள், நகரப் பொறுப்பாளா் முல்லை செழியன், பொறுப்புக் குழு உறுப்பினா் திருமால்செல்வன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.