அரசுப் பள்ளிகளுக்கு ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ரூ. 4.38 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடம் கட்டும் பணியை உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ரூ. 4.38 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடம் கட்டும் பணியை உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பாலக்கோடு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாரண்டஅள்ளி, பாலக்கோடு, கும்மனூா் ஆகிய பகுதிகளில் புதிய பள்ளிக் கட்டடம் மற்றும் சமுதாயக் கூடம் ஆகியவை ரூ. 4 கோடியே 38 லட்சம் மதிப்பில் கட்டும் பணி தொடக்க விழா, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி தலைமையில் நடைபெற்றது.
விழாவில், மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் புதியப் பணிகளை தொடக்கி வைத்து பேசியதாவது:
பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 90.65 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீா் வசதி மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ. 2.72 கோடி மதிப்பில், பத்து வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆய்வகக் கட்டடம், ஆண்கள் கழிவறைகள், குடிநீா் வசதி மற்றும் சுற்றுச் சுவா் கட்டும் பணிகளும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தில், 2019-20-ஆம் ஆண்டின் கீழ், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கும்மனூா் அருகே எக்காண்டஅள்ளி கிராமத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவையும் கட்டப்பட உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் தொ.மு.நாகராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால், வட்டாட்சியா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கௌரி, அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...